
சென்னையில் இன்று திமுக கட்சி 75 வது பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிலையில் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டுள்ளார்.
அதாவது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலமாக பவள விழாவிற்கு கருணாநிதி வந்தது போன்று அவருடைய உருவத்தை வடிவமைத்துள்ளனர். கலைஞர் கருணாநிதி ஏஐ மூலமாக முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. இது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.