
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகன் ஜுனைத் கான், தனது தந்தையை போலவே திரைத்துறையில் தனக்கென ஒரு இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார். தனது முதல் படமான ‘மகாராஜா’ மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜுனைத், தனது எளிமையான செயல்களால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
சூப்பர் ஸ்டாரின் மகனாக இருந்தாலும், பல கோடி சொத்து இருந்தாலும், ஜுனைத் கான் அடிக்கடி ஆட்டோவில் பயணம் செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல கோடி மதிப்புள்ள கார்களில் வலம் வரலாம் என்றாலும், அவர் மும்பை நகரை ஆட்டோவில் சுற்றி வருவது அவரது எளிமையை காட்டுகிறது.
‘மகாராஜா’ பட இயக்குநர் சித்தார்த் பி. மல்ஹோத்ரா, ஜுனைத் கானின் எளிமையைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஜுனைத் கான் ஒருபோதும் பந்தா செய்ததில்லை என்றும், அவர் ஆட்டோவில் வந்ததால் ஸ்டுடியோ வாட்ச்மேன் அவரை உள்ளே விட மறுத்த சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள அத்வைத் சந்தன் இயக்கிய படத்தில் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.