
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வெங்கிலிக்கானப்பள்ளியில் ரஜினி மற்றும் சுவர்ணா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார்.
நேற்று முன்தினம் மதியம் ரஜினி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தன் மனைவியிடம் முட்டை மசாலா கேட்டார். ஆனால் அவர் முட்டை மசாலா இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் ரஜினி தன் மனைவியை அடித்தார். அப்போது அம்மாவை அடிக்காதே என்று அவர் மகன் சூர்யா தடுத்துள்ளான். இதில் கோபம் அடைந்த ரஜினி சூர்யாவை அடித்து கழுத்தை நெரித்து பிடித்துள்ளார். இதில் சூர்யாவிற்கு தொண்டையில் காயம் ஏற்பட்டு மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த சூர்யாவை அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர்கள் பதறிப்போய் உடனடியாக சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மனைவி சுவர்ணா காவல்துறையிடம் தன் கணவர் மீது கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளார். புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.