பிரபல நடிகையான ஊர்வசி பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். இப்போது ஊர்வசி குணசேத்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி கிரிஸ்டோ டாமி இயக்கத்தில் உருவான உள்ளொளுக்கு திரைப்படத்தில் ஊர்வசி நடித்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சமீபத்தில் ஊர்வசி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, மம்முட்டியும் மோகனாலும் கேரளா சினிமாவின் தூண்கள். தங்களது கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் இருவரும் சினிமாவில் உச்சத்தை தொட்டனர். இப்போது இருக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது பகத் பாஸில் சிறந்த நடிகராக இருக்கிறார். விரைவில் இந்தியா முழுவதும் அறியப்படும் சிறந்த நடிகராக பகத் பாஸில் மாறுவார் என்பதில் சந்தேகம் கிடையாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கும் திறமை அவருக்கு உள்ளது என ஊர்வசி கூறியுள்ளார்.