
சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் துணை முதல் பதவி குறித்து கேட்கப்பட்ட நிலையில் அதன் முதல்வரின் தனிப்பட்ட முடிவு என்பதால் அது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு நேற்று பெரியார் சிலைக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது. பெரியார் சிலைக்கு நடிகர் விஜய் மரியாதை செய்தது நல்ல விஷயம்தான். நண்பர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.
மேலும் நடிகர் விஜய் நேற்று பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் திராவிட சாயயல் விஜயின் அரசியல் வருகையில் தெரிகிறது என்றார். அதோடு திமுக கட்சியின் கிளை கழகம் தான் தமிழக வெற்றி கழகம் என்றும் கூறினார். அதன்பிறகு சீமான் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது போன்று பிற தலைவர்களுக்கும் விஜய் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் விஜய் பெரியார் சிலைக்கு மரியாதை செய்தது முதல் அவரை திமுக கட்சியுடன் ஒப்பிட்டு பேசி விமர்சனங்கள் எழும் நிலையில் தற்போது விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொன்னது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.