உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான whatsapp, facebook மற்றும் instagram போன்ற செயலிகளை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக instagram செயலியில் ரீல்ஸ் போடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதேபோன்று தகவல் பரிமாற்ற செயலியான whatsapp-யும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் facebook, whatsapp மற்றும் instagram போன்ற செயலிகளை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துவதால் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது 3 செயலிகளுக்கும் பொதுவான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது முகத்தை அழகுப்படுத்தி காட்டும் ‌Filter வசதியை 2025 ஆம் ஆண்டு முதல் நீக்குவதாக மெட்டா அறிவித்துள்ளது. இயற்கைக்கு மாறான இந்த தோற்றத்தால் இளம்பெண்கள் உட்பட பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதன் காரணமாகத்தான் இந்த வசதியை 2025 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் whatsapp ஆகிய 3 செயலிகளிலும் நீக்குவதற்கு மெட்டா முடிவு செய்துள்ளது.