நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார்  என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வரும் ரஞ்சித் குமார் என்பவர் அவ்வப்போது லாரி உதிரி பாகங்களை திருடி விற்பனை செய்து அந்த பணத்தை அவரது தாய், தந்தை, சகோதரன் ஆகியோரின் வங்கி கணக்குகளில் செலுத்தி வந்துள்ளார்.

இதுவரை 3.95ரூபாய் மோசடி செய்துள்ளார்.  இதனை அறிந்த தனேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் இடம் நடத்திய விசாரணையில் அவர் உதிரி பாகங்களை திருடி விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் ரஞ்சித் குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.