கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்தான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு ஆதரவற்ற குழந்தைகளுக்கு சத்ய பிரகாஷ் என்பவர் பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தியுள்ளார்.

அதாவது மனநல ஆலோசனை என்ற பெயரில்  குட் டச் மற்றும் பேட் டச் என்று அவர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்த நிலையில் தற்போது சத்திய பிரகாஷை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.