
புதுச்சேரியைச் சேர்ந்த சினோஜ் குழந்தை தத்தெடுக்க விருப்பம் கொண்டு, பேஸ்புக்கில் வெளியான “அன்பு இல்லம்” என்ற பெயரில் வந்த விளம்பரத்தை நம்பி மோசடிக்குள்ளாகி உள்ளார். அவர், அந்த விளம்பரத்தை கண்டு, “அன்பு இல்லம்” என தன்னை அழைத்த கும்பலுடன் தொடர்பு கொண்டார். அவர்கள் பல குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பி, அவர் விரும்பிய குழந்தையைத் தேர்வு செய்ய சொன்னனர். மேலும், அன்பு இல்லம் குழந்தைகளை தத்தெடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்ததை நம்பி, சினோஜ் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தார்.
இந்த நிலையில், கும்பல் உறுப்பினர்கள், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதாகக் கூறி, சினோஜிடம் ஒரு லட்சத்து 7,000 ரூபாயை கடந்த ஒரு மாதமாக பெற்றுள்ளனர். பணம் வாங்கிய பின்னர், அவர்கள் தொடர்பை நிறுத்தி விட்டனர். ஏமாற்றத்தை உணர்ந்த சினோஜ், ஆன்லைன் வழியில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பொதுமக்கள் இணையத்தில் வரும் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தாமல் இருக்க வேண்டும் என, இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.