உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியா புரத்தில் ரிங்கு என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தன் னுடைய தாய் மற்றும் சகோதரனுடன் கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தன் நண்பர்களுடன் அங்கு சென்ற ரிங்கு அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சிறுமியை நோக்கி சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் ரிங்கு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரிங்குவை தேடி வருகின்றனர்.