மும்பையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாண்டீப் பாஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிபிஏ-யாக இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாள், சுமார் 6 நிமிடங்கள் பேஸ்புக் லைவ் வீடியோ மூலம் தனது நிலைமையை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தனது நிச்சயதார்த்தத்திற்கான பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை தவறான வழக்குகளில் மாட்ட வைத்ததாகவும், தனது வாழ்க்கையை சீரழித்ததாகவும் அவர் கூறினார். மேலும் அவர்களிடம் அவர் 12.5 லட்சம் கொடுத்ததாகவும், அதை பெற முடியாததால் நீதிமன்றத்தில் மனு கொடுத்ததாகவும் கூறினார்.

ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். அதோடு தனது உடலில் உள்ள காயங்களையும், கிழிந்த டிஷர்டையும் வீடியோவில் காட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமையல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாண்டீபின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.