புனேவில் உள்ள ஹடாப்சர் பகுதியில் அமோல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான வைபவ்(31) மற்றும் டியனேஸ்வர்(27) ஆகியோருடன் அப்பகுதியில் நின்று  பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வைபவ் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த அமோல் எச்சரித்துள்ளார். மது அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினார். இருப்பினும் அவர் கேட்கவில்லை. இதனால் அமோல் வைபவ் குடிப்பழக்கத்தை குறித்து அவரது மனைவி மற்றும் தாயிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களின் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வைபவ் தனது மற்றொரு நண்பரான டியனேஸ்வர் உடன் அமோலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அமோலின் வீட்டிற்கு சென்று, அவர்கள் இருவரும் அவரது தலையின் மீது இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது தங்கை சங்கீதா குல்கர்ணி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், அவரது வீட்டிற்கு ஒருவர் சென்று பார்த்த போது, அவர் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் படித்திருந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மேல்கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.