
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆந்திர மாநிலத்திற்காக கடப்பாவில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் இன்று விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.
அப்போது நீலாங்கரை அருகே வந்த போது ரவுடி சீசிங் ராஜா தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி எடுத்து போலீசாரை சுட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுண்டரில் பலத்த காயமடைந்து சீசிங் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக கூறப்படுகிறது