
தஞ்சாவூர் மாவட்டத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 13 ஆம் தேதி whatsapp-ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில் உல்லாசமாக இருக்க பெண் தேவையா என்று இருந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் அந்த நபரில் தொடர்பு கொண்ட போது உல்லாசமாக இருக்க பெண்கள் இருக்கிறார்கள் என்று கூறி சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். பின்னர் ஒரு பெண்ணை விக்னேஷ் தேர்வு செய்த நிலையில் 10,000 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதை நம்பி அவர் முதலில் ஆன்லைன் மூலமாக ரூ.5000 பணத்தை அனுப்பியுள்ளார்.
அதன் பின் அந்த பெண் ஒரு இடத்திற்கு வருமாறு கூறி காத்திருக்க சொல்லியுள்ளார். அவர் 5 மணி நேரத்திற்கு மேலாக அங்கு காத்திருந்த நிலையில் யாரும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையில் மெசேஜ் அனுப்பியது 38 வயதான காயத்ரி என்பது தெரிய வந்தது. இவர் கடலூரை சேர்ந்தவர். இவர் இதுபோன்ற 50-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.