
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமாா் (20), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லும் போது, பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தார். அந்த நேரத்தில், 87 வயதான சண்முகம், தனது இருசக்கர வாகனத்தில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
புதுவள்ளியம்பாளையம் பிரிவு அருகே உள்ள வளைவுப் பகுதியில், நவீன்குமாா் திடீரென சண்முகம் மீது மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து கடத்தூா் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குப் வந்து, இறந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான தனியாா் பேருந்து ஓட்டுநா் சேகா் மற்றும் நடத்துநா் இதயத்துல்லா ஆகியோரை தேடி வருகின்றனர்.