
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி மெய்யழகன் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் லட்டு வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு லட்டு மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம் என்பதால் தற்போதைக்கு எனக்கு லட்டுவே வேண்டாம் என்று கார்த்தி கூறினார். இதற்கு ஆந்திரா துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கண்டனங்களை தெரிவித்து இருந்தார். அதாவது லட்டுவை வைத்து ஜோக் அடிப்பதா என்று கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தான் பேசிய கருத்திற்கு நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்து பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார்.
அதோடு தானும் ஏழுமலையான் பக்தன் தான் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவும் தன்னுடைய தம்பி கார்த்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தன்னுடைய தம்பியின் வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இதற்காக 3 நாட்களுக்கு தீக்ஷா செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் லட்டு விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அடுத்தடுத்து பவன் கல்யாண் இடம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.