
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உடுங்கல் போடூர் மலை கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் மூத்த மகன் மாதேஷ் அதே கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார். அவருடைய இளைய மகன் வெங்கடேஷ் பெங்களூரில் தேன் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மாதேஷ் மற்றும் வெங்கடேசுக்கும் நில தகராறு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணன் இல்லாத நேரம் பார்த்து அண்ணி ரீனாவிடம் வெங்கடேஷ் தப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பி ஓடிய ரீனா தன் கணவரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாதேஷ் தன் தம்பியை அரிவாளால் சராமாறியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.