
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிகராக மட்டுமின்றி ஒரு கார் ரேசராகவும் சிறந்து விளங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். நடிகர் அஜித் பைக் ஓட்டுவது மற்றும் கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
இந்நிலையில் நடிகர் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது துபாயில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்காக அவர் தீவிரமாக தயாராகி வருவதாகவும் முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது துபாயில் விரைவில் ஜிடி ரேசிங் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த தகவலை நடிகர் ஜான் கொக்கேனும் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு கார் ரேஸில் கலந்து கொள்வதாக வெளிவந்த தகவல் அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.