மும்பையின் டோம்பிவிலியில் நில்ஜே பகுதியில் அலி கான் என்ற பழ வியாபாரி ஒருவர் சாலையில் பழம் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது திடிரென பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழித்தார். பின்னர் அந்த சிறுநீர் பையை வண்டியிலேயே வைத்துவிட்டுச் சென்றார். பெண்களும் வழிப்போக்கர்களும் அருகில் நடந்து கொண்டிருந்த போதிலும், அந்த நபர் அதனை நிறுத்தவில்லை. இதைத்தொடர்ந்து கான் சிறுநீர் கழித்த பிறகு கைகளை கழுவாமல், அதே கையைக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பழங்களை பரிமாற பயன்படுத்தினார்.

இதனை அருகில் இருந்த ஒருவர் அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பழ வியாபாரியை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் முழு விசாரணையை தொடங்கினர். தற்போது அலி கானிடம் விசாரணை நடத்தப்பட்டு, முறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.