
பிரபலமான youtubeபராக இருப்பவர் ஹர்ஷா சாய். இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது 25 வயதுடைய நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோவாக எடுத்து வைத்து பணம் கேட்டும் மிரட்டுவதாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் தற்போது ஹர்ஷா சாய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே சமீப காலமாக பிரபலங்கள் மீது பாலியல் வழக்குகள் தொடர்பான செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஹர்ஷா சாய் மீதும் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் கஷ்டத்தில் உள்ள பலருக்கு பண உதவி செய்து வருகிறார். இது குறித்தான வீடியோக்களை youtube மற்றும் instagram போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.