தமிழகத்தில் தற்போது பழுதாக இருக்கும் மின் மீட்டர்களை மீண்டும் சீரமைக்க தமிழ்நாடு மின்சார வாரிய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் கணக்கீடு செய்ததில் மாநிலம் முழுவதும் சுமார் 1.55 லட்சம் மின்மீட்டர்கள் பழுதாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக 1.55 லட்சம் மின் மீட்டர்களை சரி செய்யும் பணியில் மின்சார துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,217 மீட்டர்களும், 6606 மீட்டர்களும் பழுதாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக பழுதாகி உள்ள மின்மீட்டர்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.