
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, திருப்பதி லட்டு விவகாரத்தில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளார்களோ அதை கண்டுபிடித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும். பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன் வேறொருவரிடம் ஒப்பந்தம் கொடுத்தால் பிரச்சனை முடிந்து விடும். லட்டுவை உருட்டுவதை விட இவர்கள் உருட்டிய உருட்டு இருக்கே அது இந்தியா முழுமைக்கும் பெரிய உருட்டாக இருக்கும். அதன் பிறகு நாட்டில் இருந்து வரும் பால் மற்றும் நெய் சாப்பிடும் நீ மாட்டிலிருந்து வரும் கொழுப்பை மட்டும் சாப்பிட்டால் செத்து விடுவாயா.?
இவர்கள் ஒரு கோட்பாடு வகுத்து வைத்துள்ளனர். அதில் மாட்டுக்கறி சாப்பிடுபவன் கீழ்சாதி. மாட்டுப்பால் குடிக்கிறவன் இடைநிலை ஜாதி. அதன் பிறகு மாட்டு மூத்திரம் குடிப்பவன் மேல் ஜாதி என்று கூறுகிறார்கள். மாட்டு மூத்திரம் குடிக்கும் நீ மாட்டின் கொழுப்பு சாப்பிட மாட்டியா.? இதுதான் அதிகப்படியான கொழுப்பு. மேலும் ஜாதி, மதம் போன்றவற்றை வைத்து அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் மக்களை மதிக்க மாட்டார்கள். மக்களைப் பற்றி சிந்திக்கும் தலைவனுக்கு சாதி மற்றும் மதத்தை பற்றி யோசிக்க நேரம் கூட இருக்காது என்றார்.