இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் காணொளிகள் பலவும் ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துரைக்கும். சில காணொளி நல்லதாக இருக்கும், சில காணொளி ஒருவர் செய்யும் தேவையற்ற செயலை எடுத்துக்காட்டும், சில காணொளி அவர்கள் செய்யும் தேவையற்ற செயலுக்கான பதில் எப்படி இருந்தது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கும்.

அப்படி ஒரு காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் மாடு ஒன்றை கயிற்றில் கட்டி வலுகட்டாயமாக இழுத்து செல்கின்றனர். அப்போது பின்னால் இருந்த ஒருவர் மாட்டை மிதித்து அதன் வாலை பிடித்து இழுத்து விரட்டுகிறார்.

அவரிடம் இருந்து நகர்ந்து செல்ல மாடு முயற்சிக்கிறது. ஆனாலும் தொடர்ந்து அவர் மாட்டின் வாலை பிடித்து சுற்றியபடி வருகிறார். இதனால் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மாடு திரும்பி பின்னால் வந்தவரை தனது கொம்பால் முட்டி தள்ளியது. தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியது.

கீழே விழுந்த அவரை தர தர என முட்டி இழுத்து சென்றது இந்த காணொளியிலேயே அந்த நபர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார் என்பது தெரிகிறது. இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் மாட்டிற்கு ஆதரவாக தான் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.