
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது தசெ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அப்படம் அக்டோபர் 10-ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தர்பார் படத்திற்கு பிறகு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வேட்டையின் திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்றும், இதற்கு முன்னால் உள்ள அனைத்து தோல்விகளுக்கும் இந்த படம் வெற்றி படமாக அமையும் என்றும் கூறினார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்திடம் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், Sorry எனக்கு கூறி கருத்து சொல்வதை தவிர்த்து விட்டார்.
அதாவது திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் நடிகர் கார்த்தி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது லட்டு ரொம்ப சென்சிடிவான விஷயம் அதனால் எனக்கு லட்டு வேண்டாம் என்று கூறினார். இதற்கு பவன் கல்யாண் லட்டுவை வைத்து ஜோக் அடிப்பதா என்று கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு கார்த்தி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி நைசாக நழுவி விட்டார். மேலும் இதற்கு முன்னதாக கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த விவகாரம் தொடர்பாகவும் ரஜினிகாந்த் எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறி கருத்து தெரிவிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.