புதுச்சேரி மாவட்டத்திலுள்ள பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சோசியல் மீடியா குழுவில் இணைந்துள்ளார். இந்தக் குழுவில் இருந்த மற்றொரு நபர் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(26). இவர்கள் இருவரும் இணையத்தின் வாயிலாக பழகியுள்ளனர். சுரேஷ்குமார் தங்கச்சி என கூறி ஆரம்பத்தில் பேச ஆரம்பித்து தனது குடும்ப விவரங்களை எல்லாம் அவரிடம் பகிர்ந்து அவர் அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.

ஆசை வலையில் விழுந்த அப்பெண் சுரேஷ்குமார் உடன் பலமுறை வீடியோ காலில் பேசி வந்துள்ளார் . இந்த வீடியோ காலை வீடியோவாக பதிவு செய்து சுரேஷ்குமார் அப்பெண்ணை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் 6000 ரூபாயை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் மிரட்டியதால் அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவரிடம் இருந்த மொபைல் போனை கைப்பற்றியுள்ளனர். அதில் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதுபோல மேலும் இரு பெண்கள் இவர் மீது ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைத்து சிறையில் அடைக்கப்பட்டார்.