
மலையாள திரையுலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உருவாக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையை பற்றி நடிகை பிரியாமணி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, “பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது, இதற்காக மலையாள திரையுலகில் உருவாக்கப்பட்ட ஹேமா கமிட்டி போன்று பிற மொழி திரைப்பட துறைகளிலும் இதேபோன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும்” என்றார்.
அவரது கருத்தில், திரைப்படத் துறையில் காலம் காலமாக பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு ஆளாகி வருவதாகவும், இது மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றது எனப் பதிவிட்டார். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் அவசியமாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது பல பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். திரையுலகில் மட்டும் அல்லாது, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடிக்கோடிட்டுச் சொல்லி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.