கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்கமகளூரு பகுதியில் தருவே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் அவசர எண்ணிற்கு கால் செய்து தங்கள் ஊரில் கலவரம் நடப்பதாக கூறியுள்ளார். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் என்ன பிரச்சனை?, எங்க நடக்கிறது? என விசாரணை நடத்தினர். அதற்கு அசோக் தன்னை மன்னித்து விடுமாறு கூறியுள்ளார். மேலும் தனது மாமனார் வீடு பால்குனியில் உள்ளதாகவும் அங்கு சிறப்பு பூஜைக்கு அவர்கள் அழைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தனது வீட்டில் அதிகாலையில் அனைவரும் சென்று விட்டனர் நான் வேலை முடித்துவிட்டு செல்வதற்கு நேரமாகிவிட்டது.

நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்திருக்கிறேன். எந்த பேருந்தும் வரவில்லை, மழையும் பெய்கிறது எனவே அவசர எண்ணான 112க்கு கால் செய்தேன்.என்னை தயவு செய்து என்னுடைய மாமனார் வீட்டில் விடுமாறு காவல்துறையிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட காவல்துறையினர் சிரித்துக் கொண்டே, போலீஸ் வாகனம் அரசு வாகனமாகும். இது சமூக சேவை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.தனி நபருக்கு பயன்படுத்த முடியாது என அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் வேறொரு லாரியில் ஏற்றி பால்குனியில் விடுமாறு அசோக்கை அனுப்பிவிட்டனர்