ராஜஸ்தான் மாநிலத்தலுள்ள கோகுண்டா பகுதியில் ரத்தோட கா குடா என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் விஷ்ணு கிரி(65) என்ற பூசாரி வேலை பார்த்து வருகிறார். சம்பவ நாளன்று பூசாரி கோவிலின் நடையை சாத்திவிட்டு வெளியேவே படுத்து உறங்கினார். அப்போது அவரை காட்டு விலங்கு அடித்துக் கொன்று இழுத்துச் சென்றுள்ளது. மறுநாள் காலை பூசாரியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கோவிலிலிருந்து 150 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. பூசாரியை சிறுத்தை புலி தான் அடித்து கொன்றிருக்கும் என ஊர் பொதுமக்கள் கூறினர்.

இருப்பினும் சிறுத்தை தான் கொன்றதா? அல்லது வேறு ஏதேனும் காட்டு விலங்குகள் கொன்றதா? என வனப்பகுதி காவல்துறையினர் யூகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை புலி கடந்த சில நாட்களாக ஊருக்குள் நடமாடுவதாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதனிடையே பூசாரி காட்டு விலங்குகளால் அடித்துக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.