
தமிழக அரசின் புதிய முயற்சியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க PINK நிற ஆட்டோக்கள் சென்னையில் விரைவில் அறிமுகமாக உள்ளன. இந்த சேவைக்கான அரசாணையை தமிழக அரசு இன்னும் சில நாட்களில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக, சென்னையில் 250 PINK ஆட்டோக்கள் பயணத்திற்காக உருவாக்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கு தமிழக அரசு சிறப்பு உதவியாக ரூ.1 லட்சம் மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் தங்களை ஆட்டோ ஓட்டுநராகவும் தனி தொழில் முனைவாளராகவும் நிலைநிறுத்திக் கொள்ள உதவுவதாக அரசு நம்புகிறது. இதற்கு மேலும் அதிகமான பெண்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
PINK ஆட்டோக்கள் சென்னையில் வெற்றிகரமாக அறிமுகமாகிய பிறகு, இந்த சேவை பிற மாவட்டங்களிலும் விரிவாக்கப்படும். இது தனியாக பெண்களுக்கான பாதுகாப்பான பயண சேவையை உருவாக்குவதோடு, பெண்கள் பணிபுரியும் புதிய துறையில் வளர்ச்சியடைய அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும்.