
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆசிரியையை அவதூறாக வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுராவில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் பெண் ஒருவர் ஆசிரியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவர் விடுமுறையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துள்ளார். இதில் ஒரு மாணவன் ஆசிரியை குளிக்கும் போது தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உடலுறவுக்கு அழைத்துள்ளார்.
இதனால் ஆசிரியை அந்த மாணவரிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் கோபமடைந்த அந்த மாணவன் வீடியோவை மற்ற நண்பர்களுக்கும் அனுப்பினான். அவர்கள் மூவரும் whatsapp மற்றும் instagram போன்ற செயல்களில் ஆசிரியை ஆபாச வீடியோவை பரப்பினர். இதனால் வேதனை அடைந்த ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் ஒரு தன்னார்வ அமைப்பு அவருக்கு உதவியது. மேலும் இதுகுறித்த புகாரியின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 4 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.