நாடு முழுவதும் தற்போது நவராத்திரி பண்டிகைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் ஹைதராபாத்தில் நம்ம பள்ளி கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் பிரம்மாண்ட துர்கா சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் பூஜைகள் அனைத்து முடிவடைந்த பிறகு விழா குழுவினர் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். அந்த சமயத்தில் சில மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து சிலையை உடைத்து சேதப்படுத்தியதோடு மேடையில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்ட நிலையில் தீவிர விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிக்கினார். அவருடைய பெயர் கிருஷ்ணய்யா கவுடு. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் இரவு நேரத்தில் சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அங்கு சென்ற நிலையில் உணவு எதுவும் கிடைக்காததால் ஆத்திரத்தில் சிலையை சேதபடுத்தியது தெரிய வந்தது. அதோடு யாராவது ஒருவர் அங்கு பாதுகாப்புக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் அதனை யாருமே செய்யாததால் விழா குழுவினர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.