
பிரபல ஐசிஐசிஐ வங்கியானது கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி ரிவார்டு புள்ளிகளை பெறுவதற்கு மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மேற்கொள்ளும் செலவினங்களை வரம்பிற்குள் வங்கிக் கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய விதியின் படி பிரீமியம் கிரெடிட் கார்டு தாரர்கள் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், மற்ற கார்டு தாரர்கள் 20000 ரூபாய் வரையிலும் செலவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறை நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.