தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தின் போது அடையாள அட்டையை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் வந்த வண்ணமாக இருப்பதால் தற்போது அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அரசு ஊழியர்களை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மனிதவள மேலாண்மைத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.