தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் பொதுவாகவே எதிர்க்கட்சிகள் குறித்து தன் மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருவதோடு ஆளும் கட்சி அமைச்சர்களை சரமாரியாக விமர்சிப்பார். அவ்வப்போது ஊழல் பட்டியல்களையும் வெளியிடுவார். இந்நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அரசியல் படிப்பிற்காக அண்ணாமலை சென்றுள்ளார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் அவர் படிப்பு முடிந்து மீண்டும் இந்தியா திரும்பும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 23ஆம் தேதி அண்ணாமலை லண்டனிலிருந்து சென்னை திரும்புகிறார்.

அவர் தமிழகம் திரும்பியதும் மீண்டும் பாஜகவில் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் படிப்பை முடித்து மீண்டும் தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய சான்றிதழை பெறுவதற்காக  மீண்டும் லண்டன் செல்வார் என்று கூறப்படுகிறது. மேலும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றதால் அவருக்கு பதிலாக எச் ராஜா தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.