
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொது தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார். பொதுவாக மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போதும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மாணவர்கள் பாதிப்படையாதவாறு பொது தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.