
இந்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தற்போது உணவு தானியங்கள் வழங்கல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “பிரதமரின் கரீப் கல்யாண் அண்ணா யோஜனா”திட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு தனி மனிதருக்கும் 5 கிலோ அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற இந்த வருடம் 2023-2024 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உணவு தானியங்கள் வழங்குதல் குறித்த விபரங்கள் பின்வருமாறு, யூனியன் பிரதேசங்களுக்கு 4,95,45,597 மில்லியன் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டிற்கு 23,36,649 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகப்படியாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 94,50,248 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பீகார், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து உணவு தானியங்கள் அதிகப்படியாக வாங்கிய மாநிலங்களாகும்.