
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கோதாவரிக்கனி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வினய் (30) என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி (25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதில் அஞ்சலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவன் மற்றும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். வினய் மற்றும் அஞ்சலி இருவரும் கள்ளக்காதலில் இருந்த நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில் அவரின் கணவரும், அண்ணனும் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு கள்ளக்காதலை கைவிடுமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் இருவரும் அதனை மறுத்துவிட்டு எக்காரணத்தை கொண்டும் கள்ளக்காதலை கைவிட முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு கட்டத்தில் வினயுடன் அஞ்சலி வீட்டை விட்டு ஓடி விட்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக வினய் தன் வீட்டிற்கு அஞ்சலியை அழைத்து சென்ற நிலையில் முதலில் அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தன் மகனின் விருப்பத்தை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் அவர்கள் விருப்பப்படியே ஒரு வாடகைக்கு ஒருவீடு எடுத்து தங்க வைத்தனர். இதற்கிடையில் அஞ்சலியின் அண்ணன் தன் தங்கை எங்கே இருக்கிறார் என்ற விவரம் தெரியாததால் கடும் கோபத்தில் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன் தங்கைக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு பாசமாக பேசி சீர்வரிசை கொண்டு வருவதாக கூறி இருக்கும் இடத்தை அறிந்தார்.
அந்த மாநிலத்தில் ஒரு திருவிழாவை முன்னிட்டு பிறந்த வீட்டிலிருந்து சீர் செய்வது வழக்கம். பின்னர் வினையை தன் அண்ணனை அழைத்து வர அஞ்சலி அனுப்பிய நிலையில் அங்கு அஞ்சலியின் கணவரும் இருந்தார். ஆனால் வினய்க்கு அது அஞ்சலியின் கணவர் என்று தெரியாது. இது தெரியாமல் அவர்கள் இருவரையும் வினய் வீட்டிற்கு அழைத்து சென்றார். வீட்டிற்கு சென்றவுடன் தன் கணவரை பார்த்து அஞ்சலி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அஞ்சலியை ரூமூக்கள் வைத்து அடைத்துவிட்டு வினயை இருவரும் சேர்ந்து சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.
பின்னர் இருவரும் தப்பி ஓடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அதற்குள் வினய் இறந்துவிட்டார். அவரின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் தங்கள் மகன் வினயின் சடலத்தை பார்த்து கதறிய பெற்றோர் அஞ்சலி தான் எல்லாத்திற்கும் காரணம் என்று கூறி அவரை தாக்க முற்பட்டதால் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த அஞ்சலியை மீட்டனர். தப்பி ஓடிய அஞ்சலியின் கணவர் மற்றும் சகோதரரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.