
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்பவர் தாடி பாலாஜி. இவர் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்த ஆசி வாங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. அதோடு நடிகர் விஜயின் உத்தரவின் பெயரில் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அவர் இணைந்ததாகவும் மாநாட்டுகான பணிகளை கவனித்துக் கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது நடிகர் தாடி பாலாஜி தான் விஜய் கட்சியில் சேரவில்லை என்று கூறியுள்ளார். அதாவது புஸ்ஸி ஆனந்த் தன்னை நேரில் அழைத்ததால்தான் அங்கு சென்றதாகவும் அவர் விஜய் கேட்டுக் கொண்டதாக கூறி மாநாடுக்காண பணிகளை கவனிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டதால் அதற்கு ஒப்புக்கொண்டு மாநாட்டுகான பணிகளை கவனித்து வருவதாகவும் கூறினார். அதுபோக விஜய் கட்சியில் தான் சேரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் விஜய் சொன்னதா மாநாடு பணிகளை கவனிக்க சொன்னதா புஸ்ஸி ஆனந்த் சொன்னதால் மட்டும் தான் அதற்கு சம்மதம் தெரிவித்து பணிகள் செய்து வருவதாகவும் கட்சியில் சேரவில்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.