
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் உத்தரவின் பெயரில் கட்சியை நிர்வாகிகளுக்கு அரசியல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இன்று முதல் தமிழக வெற்றி கழகத்தை நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரை அரசியல் குறித்த பயிலரங்கம், மாநாடு பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, மாநாடு குழுக்கள் மற்றும் தற்காலிக பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு அறிவுரை வழங்க உள்ளனர். எனவே இந்த கூட்டத்தில் அனைத்து குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார்.