
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக விமர்சித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதிமுகவின் வாக்கு வங்கி 45 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதமாக குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் நிச்சயம் அதிமுகவால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. தியாகத்தை பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதலமைச்சராக பதவியில் அமர்த்தியவர். அந்த பதவியில் தொடர துணை புரிந்தவர் என அனைவரது முதுகிலும் குத்திய துரோகியை பொதுமக்கள் நம்ப தயாராக இல்லை என்பது அதிமுகவின் தேர்தல் தோல்வி மூலம் தெரிகிறது. அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டும் தான் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.
இல்லையெனில் ஒரு நாளும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. வெற்றி கனி என்பது எட்டாக்கனியாக மாறிவிடும் என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டது தான். அவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட மாட்டார்கள். மீண்டும் அதிமுகவில் ஒற்றுமை என்ற பேச்சுக்கு இடமில்லை. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருபோதும் மீண்டும் சேர்க்க மாட்டோம் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக விமர்சித்து பன்னீர்செல்வம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப்… pic.twitter.com/ZU1L2p2Laf
— O Panneerselvam (@OfficeOfOPS) October 18, 2024