
பிரபல நடிகையான தமன்னா விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மஹாதேவ் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தைய செயலியின் துணை செயலியில் ஐபிஎல் போட்டிகளை அங்கீகரிக்கப்படாத ஸ்ட்ரீமிங் செய்வதை ஊக்குவித்ததாக கூறி நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பினார்கள்.
இந்த நிலையில் நடிகை தமன்னா நேரில் ஆஜராகி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். ஏற்கனவே மகாதேவ் செயலுக்கான விளம்பரங்களில் நடித்த ரன்பீர் கபூர், ஸ்ரத்தா கபூர் ஆகியோரை அமலாக்க துறையினர் ஏற்கனவே சம்மன் அனுப்பி விசாரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.