
மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர் பாகிஸ்தான் சிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத் என முழக்கமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் மீதான விசாரணையில் மத்திய பிரதேஷ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி மாதத்தில் இரண்டு முறை காவல் நிலையத்திற்கு சென்று அங்கு ஏற்றப்பட்டிருக்கும் இந்திய தேசிய கொடி முன் நின்று 21 முறை சல்யூட் அடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சல்யூட் அடிக்கும் போது பாரத் மாதா கி ஜே என்று உரக்க சொல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.