
கடந்த ஒரு ஆண்டு காலமாக பைஜூஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் பைஜூஸின் வணிகம் குறைந்துள்ளது. தற்போது பைஜூ ரவீந்திரன் மெய்நிகர் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பைஜூஸ் நிறுவனத்திற்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன. அவை வருவாய் ஈட்டு வருவதாகவும், மாணவர்கள் சேர்க்கையில் வளர்ச்சியை கண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சமீப காலங்களில் பைஜூஸ் எதிர்கொண்ட சவால்களை மீண்டும் புதுப்பிக்க உள்ளேன். நான் துபாய்க்கு ஓடிவிட்டதாக மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால் நான் என் தந்தையின் சிகிச்சைக்காக இங்கு வந்தேன். நான் மீண்டும் இந்தியா வருவேன். அரகங்களை நிரப்புவேன், ஆனால் அதற்கான நேரம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் நடக்கும், பைஜூஸ் நிறுவனம் சந்தைக்கு புதிய அவதாரத்தில் வரும் என்று அவர் கூறினார்.