
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை 3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு நகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.