
RAW அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா ஒரு பரபரப்பான குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தது. அதாவது நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குரு பத்வந்த் குன்னுவை கொலை செய்ய அவர் சதி செய்ததாக FBI அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. இதற்காக நிகில் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க இந்தியா குழு அமைப்பதாக உறுதி கொடுத்திருந்த நிலையில் தற்போது இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவை டெல்லியில் வைத்து சிறப்பு தனி படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை குற்ற பத்திரிக்கையில் புகைப்படத்துடன் கூடிய குற்றவாளியாக விகாஷ் யாதவை அறிவித்திருந்தது. அவர் மீது கூலிக்கு கொலை செய்தல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது டெல்லியில் சிறப்பு தனி படை போலீஸ் சார் விகாஷ் யாதவை கைது செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது விகாஷ் யாதவ் யார் என்பது குறித்து பார்ப்போம். இவர் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் பணிபுரிந்துள்ளார். இவர் போர்கலை மற்றும் ஆயுதங்களை கையாளுதல் போன்ற பயிற்சிகளை முடித்துள்ளார். இந்த கொலை வழக்கில் அவர் முதன்மைக் குற்றவாளி அல்ல. அவர் CC-1 (இணை சதிகாரர்) என்று கருதப்படுகிறார். இவர் இந்திய அரசு அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் மற்றொரு குற்றவாளி ஒருவருடன் சேர்ந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்யும் முயற்சி செய்ததாக அந்த நாட்டு FBI குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான நிகில் குப்தா கடந்த வருடம் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து விகாஷ் யாதவின் 3 புகைப்படங்களை வெளியிட்டு அவரைத் தேடப்படும் ஒரு குற்றவாளியாக அறிவித்தனர். இந்த கொலை முயற்சியில் இந்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. அதோடு விகாஷ் யாதவை கைது செய்ய துணை புரிவதாகவும் உறுதி கொடுத்தது. இதனை தொடர்ந்து இந்திய அரசின் ஒத்துழைப்பு தங்களுக்கு திருப்தியை தருவதாக அமெரிக்கா கூறியது. அதோடு இந்த வழக்கில் கூடுதல் ஒத்துழைப்பு தேவை என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது விகாஷ் யாதவ் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இந்தியாவில் விசாரணை நடைபெறுமா? அல்லது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவாரா போன்ற விவரங்கள் தெரியவில்லை.