இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று அதிக அளவில் மாசடைகிறது. காற்று மாசுபாடு டெல்லியில் அதிகரித்துக் கொண்டே போவதால் சுற்றுச்சூழல் மோசமாகி வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் மேல் பனி படர்ந்து இருப்பது போல ரசாயனங்கள் நுரைகளாக படர்ந்து காணப்படுகிறது. இது குறித்த வீடியோ இணையதளத்தில் அதிகமானோர் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. புதுடெல்லியில் காற்று மாசுபாடு அளவு 293 ஆக உயர்ந்து காணப்படுகிறது. இந்த காற்று மாசுபாடு காரணமாக பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

யமுனை ஆற்றில் தோன்றும் இந்த நுரைகளில் பாஸ்பேட் மற்றும் அலுமினியம் அதிக அளவில் கலந்துள்ளது. இதனால் மக்களுக்கு தோல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற வியாதிகள் வர அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு மாசுபாடு கட்டுப்பாட்டு துறை நிபுணர்கள் தெரிவித்தனர். இதேபோன்று புதுடெல்லியில் பாஜக செய்தி தொடர்பாளர் பூனாவாலா கேஸ் முககவசம் அணிந்து ஊடகத்துக்கு தொகுத்து வழங்கிய காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடை கட்டுப்படுத்த பட்டாசுகள் போன்ற வெடிபொருட்களை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.