நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என்று கூறினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் திமுகவினர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவதாக கூறியது தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறினார்.

இந்நிலையில் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சீமான் தமிழ் தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று கூறியதற்கு அவரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, சீமான் ஒரு போலி அரசியல்வாதி. கண்டிப்பாக மக்கள் அவரை புறம் தள்ளுவார்கள். தமிழ் தாய் வாழ்த்து பற்றி பண்பாடு தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் புரியும். மேலும் சீமான் போன்றவர்கள் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்வதற்காக பேசுவார்கள் என்று கூறினார்.