தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசாங்கம் தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளது. அதாவது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C, D பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் கிடைக்கும். மேலும் ஏற்கனவே தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் ஊழியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.