ஹரியானா மாநிலத்திலுள்ள சிர்சாவைச் சேர்ந்த ஜகத் சிங்கின் ‘அன்மோல்’ என்ற எருமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.23 கோடி மதிப்பிற்கு இந்த எருமை கருதப்படுகிறது, இது 2 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 10 மெர்சிடிஸ் கார்களை விட அதிக விலையைக் கொண்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இந்த எருமையை காண கண்காட்சிக்கு திரண்டுள்ளனர். அவ்வளவு அதிக விலைக்கு எருமை எப்படி என்று கேட்கும் நபர்களுக்கு, எருமையின் உயர்தர விந்து மற்றும் சிறப்பு பராமரிப்பே இதற்கான காரணம் என விளக்கப்படுகிறது.

அன்மோல் எருமையின் விந்து அதன் உயர்தர இனப்பெருக்க திறனால் மிகுந்த மதிப்பைக் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு அன்மோல் விந்து ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த எருமையின் விந்து மூலம் பல உயர்தரக் கன்றுகள் பிறக்கின்றன, இது மாடு வளர்ப்பாளர்களுக்கு பெரும் வருவாய் தருகிறது. குறிப்பாக, முர்ரா இனத்தைச் சேர்ந்த இந்த எருமை, அதன் விந்து மூலமாக பல்வேறு பகுதிகளில் தேவைக்கான பெரும் வர்த்தகமாக மாறியுள்ளது.

அன்மோல் எருமையின் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இதற்கு  தினசரி 5 கிலோ பால், 4 கிலோ மாதுளை ஜூஸ், 30 வாழைப்பழங்கள், 20 முட்டைகள், பாதாம் போன்ற உணவுகள்  எருமைக்கு வழங்கப்படுகிறது. அதோடு, தினமும் இருவேளை குளிப்பட்டப்படுகிறது. அதுமட்டுமல்லது அன்மோலுக்கு, கடுகு மற்றும் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும் முக்கிய பராமரிப்பு முறையாகும்.

அன்மோலின் விலை அதிகரிப்புக்கான மற்றொரு முக்கிய காரணம், அதன் பலவித விருதுகள். 8 ஆண்டுகளாக அன்மோல் பல  விருதுகளை வென்றுள்ளது. இதன் விந்து மற்றும் உடல்நல பராமரிப்பு காரணமாக, அதன் தகுதி இன்னும் விலை உயர்தலுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த வகையான உயர்தர எருமைகள், மாட்டு வளர்ப்பாளர்களுக்கு பெரும் வருமானம் தரும் வகையில் செயல்படுகின்றன. அன்மோல் போன்ற எருமைகளை வளர்க்கும் முறைகள், உயர்தர இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கின்றன.