
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநாட்டு பணிகளை பார்த்துவிட்டு நேற்று மாலை புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சரவணன் உடலை பார்த்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. சரவணன் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் அவர்கள் மாரடைப்பால் இயற்கை எய்தினார் அவரின் உடலை நேரில் சென்று மரியாதை செய்த பொதுச்செயலாளர் புஸி என் ஆனந்த் அவர்களின் கதறிஅழுகை 🥹💔 pic.twitter.com/hQ8XfEAmYe
— TVMI Kanyakumari (@TVMIkanyakumari) October 22, 2024